பசுமையான வளாகங்களைக் கொண்ட கோவை மற்றும் திருப்பூர் கல்வி நிறுவனங்களுக்கு என்.சி.எஸ். விருது

கோவை : இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இடையே என்.சி.எஸ். விருதுக்கான போட்டியை இயற்கை பாதுகாப்பு சங்கம் நடத்துகிறது.

கோவை : இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இடையே என்.சி.எஸ். விருதுக்கான போட்டியை இயற்கை பாதுகாப்பு சங்கம் நடத்துகிறது. 

பசுமையான சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் இயற்கை பாதுகாப்பு சங்கம் விநோதமான போட்டியை அறிவித்துள்ளது. அதாவது, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பசுமையான வளாகங்களைக் கொண்டிருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்நிறுவனங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். இதில், சிறந்தவையாக தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு என்.சி.எஸ். விருது வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் வரும் 10-ம் தேதிக்குள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். 

"சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த நடுவரால் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். மேலும், வெற்றியாளர்கள் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், சுற்றுச்சூழலின் தாக்கம் போன்றவற்றை மட்டும் அல்லாமல், பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்," இவ்வாறு கூறினர் ஒருங்கிணைப்பாளர்கள்.

இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தொழில்நிறுவனங்கள், 9442359292, 9967636921 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...