நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரின் குடிசை வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது.

பந்தலூர் தாலுகா சேரம்பாடியை அடுத்த சந்தன மா குன்னு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் ஆதிவாசி இன குடும்பங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் கடந்த 10 வருட காலமாக இரவு நேரத்தில் அருகில் உள்ள அராப்பள்ளி வராந்தாவில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானைக் கூட்டம் பொம்மி என்பவரது குடிசையை இடித்துத் தள்ளியுள்ளது. இதில், அவரது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர். மேலும், இடிந்த குடிசையை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.