கோவை : முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ததுடன், பணத்தை திரும்ப அளிக்காத தனியார் பேருந்து நிறுவனத்திற்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குனியமுத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மனைவி வனஜா (41). இவர் கடந்த ஆண்டு யுனிவா்செல் டிராவல்ஸில் வெளியூருக்கு செல்வதற்காக இணையதளம் மூலம் ரூ. 500 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், இவரது டிக்கெட் முன்பதிவு திடீரென ரத்து செய்த பேருந்து நிறுவனம், இதற்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளது. பின்னர், இது தொடர்பாக கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட வனஜா செலுத்திய டிக்கெட் கட்டணம் ரூ.500-ஐ 9 சதவீத வட்டியுடன் வழங்கவும், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50,000-ம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ. 2,500 ஐ வழங்க யுனிவா்சல் டிராவல்ஸிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.