கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல்முறையாக விவசாயம் இணைப்பு

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டமைப்பு, நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக விவசாயத்தையும் கோவை மாநகராட்சி இணைத்துள்ளது.

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டமைப்பு, நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக விவசாயத்தையும் கோவை மாநகராட்சி இணைத்துள்ளது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் உள்பட 8 குளங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ், குளங்கள் பராமரிப்பு, குளத்தின் அருகே இருக்கும் பொதுஇடங்களை மேம்படுத்துதல், பூங்கா மற்றும் நடைபாதை போன்றவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி குளங்களை மறுசீரமைக்கும் வகையில், கரைகளைப் பலப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் உபரிநீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ரூ. 152 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதோபோல, பந்தய சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதி சாலைகளை மாதிரி சாலைகளாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 2-வது கட்டமாக நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி மற்றும் குமாரசாமி ஆகிய குளங்களை மறுசீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் முதல்முறையாக விவசாயத்தை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

5,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த கோவை மாநகராட்சியுடன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது. 

"தற்போது வரை உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாடு குறித்தே கவனம் செலுத்தி வந்தோம். இப்போது, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விவசாயத்தையும் இணைத்திருப்பது நகர்ப்புறத்தின் எல்லைகளில் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது," இவ்வாறு கூறினர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூத்த அதிகாரிகள்.

மேலும், "இத்திட்டத்தின் கீழ் குளங்களில் அமைக்கப்படும் கழிவு நீர் சுத்திகரித்து மையங்களினால், ஆண்டுமுழுவதும் நீர் தூய்மையானதாகவே இருக்கும். மேலும், இந்த நீரினை குளத்திற்கு அருகாமையில் இருக்கும் சுமார் 5,000 பரப்பளவு ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் திருப்பி விட முடியும். இந்தத் திட்டத்திற்கு கோவை மாநகராட்சியுடன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கு அரசு அனுமதி கொடுக்கும்பட்சத்தில், இந்த மாதத்தில் இருந்து பணிகள் தொடங்கும்," என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சிங்காநல்லூர் உள்பட 8 குளங்கள் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குறிச்சி குளத்தையும் சேர்க்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...