கோவை : விவசாயிகள் இருவரை கள் இறக்கியதாக போலீசார் கைது செய்ததைக் கண்டித்து கட்சிசார்பற்ற விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவையை அடுத்த பேரூர் பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் நீராபானம் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடவள்ளி காவல்துறையினர் திடீரென அப்பகுதியில் கள் இறக்குவதாகக் கூறி ஆய்வு மேற்கொண்டு அருண்குமார் மற்றும் துரை உள்ளிட்ட இருவரைக் கைது செய்து உள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது :- விவசாயிகள் நீராபானம் தயாரித்து வருவதை, காவல்துறையினர் கள் இறக்குவதாகக் கூறி பொய் வழக்கு போட்டு உள்ளனர். ஆதாரமில்லாமல் கைது செய்தவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.