நீலகிரியில் இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்தும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்தும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருசக்கர வாடகை விடுபவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி : சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடும் இருசக்கர வாகனத்தைச் சேதப்படுத்தும் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இருசக்கர வாடகை விடுபவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்பு வரை சீசன் மற்றும் பள்ளி கல்லுரிகளின் நீண்ட விடுமுறையின் போது மட்டும் வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள், இப்போது வார இறுதி நாட்களிலும் வரத் துவங்கியுள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்திற்காக பேருந்து, வாடகை வாகனம், சொந்த வாகனங்களில் என வசதி கேற்ப பயணித்து சுற்றுலா ஸ்தலங்களைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர். 

இந்நிலையில், இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருபவர்கள் தங்கள் சங்கத்தின் மூலம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “ தாங்கள் கடந்த 18 வருடமாக இரு சக்கர வாகனங்களைச் சுற்றுலாவிற்கு வரும் தனி நபர்கள் மற்றும் தம்பதியினர் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வாடகைக்கு விடுவதைத் தொழிலாக வைத்துள்ளோம். மேலும், இரு சக்கர வாகனங்களை வாடகைக்குக் கேட்டு வருபவர்களிடம் முறையான ஆவணங்களைப் பெற்ற பிறகே வாடகைக்கு விடுவோம். 



இந்த நிலையில், சமீபமாக வாடகைக்கு எடுத்துச் செல்லும் இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்துவது, அதில் பயணிக்கும் பயணிகளைத் தாக்குவது என டூரிஸ்ட் வாகன ஓட்டிகள் எங்கள் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். மேலும், போதிய உரிமங்கள் இல்லாத காரணத்தால் எங்கள் வாகனங்களைக் கைப்பற்றி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவதால், அங்கிருந்து மீண்டும் வாகனங்களை மீட்பதற்கு ரூ. 5000 வரை கொடுக்க வேண்டியுள்ளது. 



எனவே, இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் புரியும் நபர்களுக்கு முறையான உரிமத்தை வழங்கக் கோரியும், வாகனங்களைச் சேதப்படுத்தும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...