தேசிய அளவிலான அங்கக வேளாண்மை குறித்த மூன்று நாள் கலந்தாய்வு தொடங்கியது

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 3 நாள் அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது.



கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 3 நாள் அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உத்தரபிரதேச மாநில மோடிபுரத்தைச் சேர்ந்த இந்திய பண்ணைத்திட்ட ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவிலான அங்கக வேளாண்மை கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்கள் நடக்கும் இந்தக் கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது. 



தொடக்க நிகழ்வில், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தைச் சேர்ந்த எம்.பி. சிங், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், ஆராய்ச்சி இயக்குநர் ராமராஜ், பயிர் மேலாண்மை இயக்குநர் சி. ஜெயந்தி, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் உதவி பொது இயக்குநர் எஸ்.பாஸ்கர், அங்கக வேளாண்மை துறைத் தலைவர் இ.சோமசுந்தரம், எஸ்.ரவிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



அங்கக வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்து கலந்தாய்வில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நீ.குமார் பேசுகையில், "கஜா புயலால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சாதனங்களின் உதவியோடு விவசாயப் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அளவிட்டு வருகிறோம். இதுகுறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதனை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம்," என்றார்.



மேலும், தாவரங்களைத் தாக்கும் வெள்ளை ஈ பாதிப்பு குறித்து பேசிய அவர், விவசாயிகளின் எதிரிகளான வெள்ளை ஈ-க்களை உணவாக உட்கொள்ளும் ஒட்டுண்ணிகள் வளர்ப்பை ஊக்குவித்து, இரசாயன மருந்தின் பயன்பாட்டை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...