திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் திருப்பூர் மாநகாட்சியின் நடவடிக்கையை கைவிடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் திருப்பூர் மாநகாட்சியின் நடவடிக்கையை கைவிடக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

திருப்பூர் கல்லூரி சாலை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், 25 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகமானது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்குவதாகக் கூறி இடத்தை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது. 



இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்ட கூடும் எனக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் என பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு நோய் பரப்பும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.



எனவே, இப்பகுதியில் குப்பைகளை கொட்டி எந்தத் திட்டத்தையும் செய்யக் கூடாது, அதையும் மீறி திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், மாநகராட்சி அலுவலகம் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...