பழனி முருகன் கோவிலில் கோபுரக்கலசம் திருட்டு : கோவில் நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்ய இந்து அமைப்புகள் வலியுறுத்தல்

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலின் உபகோவிலில் கோபுரகலசம் மர்மநபர்களால் இன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலின் உபகோவிலில் கோபுரகலசம் மர்மநபர்களால் இன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோவிலின் கலசம் திருடப்பட்ட இதேநாளில் தான், கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று வருடாபிசேகம் நடைபெற இருந்த அழகுநாச்சியம்மன் கோவிலில் கோபுரக்கலசம் திருடப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், பழனி டி.எஸ்.பி. விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். தொடர்ந்து, கோபுரக் கலசத்தை திருடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், பழனி கிரிவீதியில் கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பெரும்பாலானவை இயங்காமலும், பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் உள்ளன. குற்றச்சம்பவங்களைக் கண்டறிந்து தடுப்பதற்கு சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் காவல்துறையினரிடம் காண்பித்தால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். 



ஆனால், கோவில் நிர்வாகம் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாகவும், கோவில் வருமானத்தை உயர்த்துவதில் மட்டுமே நோக்கம் கொண்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்பினர், பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...