கோவை : கோவையில் ஓலா டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி 400-க்கும் மேற்பட்ட ஓலா ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ஓலா டாக்ஸி ஓட்டி வருகிறார். இன்று காலை வடகோவை மேம்பாலம் அருகே இவருக்கும் உதகையைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஓலா ஓட்டுநர் சிவக்குமார், அரசு பேருந்து ஓட்டுநரால் தாக்கப்பட்டுள்ளார். இதனால், காயமடைந்த ஓட்டுநர் சிவக்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல்நிலையத்தில் ஓலா ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் அரசு பேருந்து ஒட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென என கோவையில் 400-க்கும் மேற்பட்ட ஓலா ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து ஓலா ஒட்டுநர் அருண்குமார் கூறுகையில், "கட்சி சாராத 5 தொழிற்சங்கங்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுவரையிலும் 400 பேர் பங்கேற்றுள்ளோம். மேலும், 900 ஒட்டுநர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்," என்றார்.
மற்றொரு ஓலா ஓட்டுநர் கூறுகையில், "ஓலா நிறுவனத்திற்கும் எங்கள் மீது அக்கறை இல்லை. ஆகையால், நாங்களே இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்," என்றார்.

ஓலா ஓட்டுநனர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் ரயில் நிலைய பயணிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளானர்.