திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக திருப்பூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர்.
திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக திருப்பூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்தனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிவாரணப்பொருட்களை வழங்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களால் முடிந்த பொருட்களான அரிசி, மெழுகுவர்த்தி, பிஸ்கட் உள்ளிட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேகரித்து பள்ளியில் ஒப்படைத்தனர். பின்னர், இதனைப் பள்ளியின் ஆசிரியர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தர்மபுரி பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.