கோவை : நீதிபதியுடன் மத்திய அரசு வக்கீல் தகராறில் ஈடுபட்ட விவகாரத்தில் புதிய சிறப்பு அரசு வக்கீலை நியமிக்க அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதி மன்றத்தில் போதை பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதில் பொறுப்பு நீதிபதியாக சஞ்சய் பாபா உள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெறும் போது மத்திய அரசின் சிறப்பு வக்கீல் ரேணுகா தேவி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையெடுத்து, அரசு வக்கீல் இல்லாமல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரேணுகா நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து வக்கீல் ரேணுகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில் அவர் ஆஜராகி மன்னிப்பு கேட்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் நீதிபதி அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கு குறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த சம்மன் இயக்குநருக்கு கிடைக்க பெறாததால் நேற்று இயக்குநர் நேரில் ஆஜராகவில்லை.
மேலும், மத்திய அரசு சார்பில் சிறப்பு வக்கீலை நியமிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.