கோவையில் தெருநாய்களிடம் இருந்து பெண் மயில் மீட்கப்பட்டது

கோவை : கணபதி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆகியோர் இணைந்து தெருநாய்களிடம் சிக்கிய பெண் மயிலை சிகிச்சைக்காக மிருகசாலையில் ஒப்படைத்தனர்.

கோவை : கணபதி குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆகியோர் இணைந்து தெருநாய்களிடம் சிக்கிய பெண் மயிலை சிகிச்சைக்காக மிருகசாலையில் ஒப்படைத்தனர்.

நான்கு வயதுடைய பெண் மயிலை தெருநாய்கள் விரட்டி கொடூரமாக தாக்கியுள்ளன. அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அகிலா, அதே குடியிருப்பில் வசிக்கும் இயற்கை ஆர்வலர் சையத்திடம் தெரிவித்துள்ளார். இயற்கை ஆர்வலர் சையத், மயிலுக்கு முதலுதவி செய்வதற்காக வன அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். 

தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த வன அதிகாரிகள் ரத்த வெள்ளத்தில் கிடந்த மயிலை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மிருகசாலைக்கு கொண்டு சென்றனர்.



இதுகுறித்து சையத் கூறுகையில், "பொதுமக்கள் காயமடைந்த மயிலைக் கண்டதும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமளவு விழிப்புணர்வுடன் இருப்பது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டத்தக்கது," என்றார்.

மேலும், நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மயிலால் பறக்க முடியவில்லை என்கின்றனர், கணபதி குடியிருப்பாளர்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...