கோவையில் சுகாதாரமில்லா 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

கோவை : கோவை உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்ததையொட்டி நேற்று மாலை உணவங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை : கோவை உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்ததையொட்டி நேற்று மாலை உணவங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் உள்ள உணவகங்களில் சுகாதாரமின்றி உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வில் ஈடுபட்டனர்.



நேற்று நடைபெற்ற அவ்வாய்வினை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மொத்தம் 7 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவக உரிமையாளர்களுக்குச் சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கினர்.

மேலும், சுகாதாரமின்றி உணவகம் நடத்தி வந்த 4 உணவகங்களுக்கு இன்ஸ்பெக்சன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நாளிலிருந்து 14 நாட்களுக்குள் சுகாதாரத்தை சரி செய்யவில்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளில், "உணவகங்களில் உள்ள சமையலறையின் உட்பகுதி சுகாதாரமின்றி இருப்பதைச் சரி செய்வது, அதேபோல சமையலர்கள் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் சுயசுத்தமாக இருப்பது, சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களை முறையாக மூடி வைப்பது, கொதிக்க வைத்த தூய நீரையே பொது மக்களுக்குத் தருவது, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது" போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆண்டவர் உணவகம், கஸ்தூரி பவன், வசந்த் பவன் மற்றும் தன்யா உணவகம் ஆகியவற்றில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...