கோவை: வீடுகளின் கூரைகள், உயர்ந்த கோபுரங்கள், மின்கம்பங்கள் என ஏராளமானவை கஜா புயலின் வேகத்தைத் தாங்கி கொள்ளாமல் சேதமடைந்த நிலையில் பனைமரங்கள் கம்பீரமாக நின்றுள்ளன.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் நீண்ட காலம் வரையிலும் பலனளிக்க வல்லது. அதனால் பனையை கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகத்தருவுக்கு ஒப்பாக மக்கள் கருதுகின்றனர். அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த பனைமரம், கஜா புயலில் குறைந்தளவு சேதாரம் அடைந்தது ஆட்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னை மரங்களே வீழ்ந்த நிலையில் பனைமரங்கள் வலிமையாக நிற்க அதன் வடிவமைப்பு தான் காரணமாகும். பனையின் உச்சிப்பகுதியில் இருக்கும் மடிந்த இலைகள் முதல் மண்ணுக்கடியில் உள்ள வேர்த் தொகுதிகள் வரை எல்லாமும் இணைந்து தான் புயலில் இருந்து பனை மரங்களைக் காப்பாற்றியுள்ளது.
பனை மரங்கள் நீண்டகால பயிர். நிலத்தடி நீரைச் சேமிக்கும் திறன் அதிகம் கொண்டவை. எனவே, அதன் அமைப்பு பூமியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு வேர்த்தொகுதிகளை உடையது. பனையின் வேர்கள் குறைந்தது 5 முதல் 10 அடி வரை மண்ணுள் செல்லும் குழாய் வடிவமைப்பைக் கொண்டவை. நன்றாக மண்ணில் ஊடுருவிய பனை வேர்களின் பிணைப்பு தன்மையால், அதனை எளிதில் பிடுங்க முடியாது.
மேலும், அதன் தண்டுகளின் நாள அமைப்பு மென்மையானவை. எனவே, அவற்றால் காற்றிற்கு ஏற்றவாறு வளைய முடியும். அதன் உச்சியில் இருக்கும் மடிந்த இலையமைப்பு காற்றினை உட்செலுத்த விடாது.
ஆனால், தென்னை மரங்களில் இடைவெளியுடன் இருக்கும் இலைகள் காற்றின் வேகத்தினை ஈடு செய்ய திணறிப் போகும். இதனால் தான் கஜா புயலில் தென்னைகள் பலவீனமாகிவிட்டன. பனைகள் குறைந்த சேதத்தில் வலிமையாக நின்றன.