நீலகிரி : உதகையில் உள்ள கப்பச்சி கிராமத்தில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் ரூ. 1.50 கோடி செலவில் இரண்டு சாலைகளை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

உதகை அருகே உள்ள கப்பச்சி கிராமத்தில் மதுரை வீரன் காலனிக்கு செல்லும் சாலை குறுக்கே சிறுஓடை உள்ளதால் இப்பகுதி மக்கள் இந்த ஓடையின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மலைதோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல முடியாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வந்தனர். இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கப்பச்சி கிராமத்தில் உள்ள 2 சாலைகள் சீரமைக்கும் பணிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில், மதுரை வீரன் காலனிக்கு செல்லும் சாலையை சீரமைக்க ரூ. 1 கோடியும், மற்றொரு சாலைக்கு ரூ. 50 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சாலை சீரமைப்பிற்கான பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன், திட்ட இயக்குநர் பாபு, கப்பச்சி வினோத் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆகியோர் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினர்.

இதனைத்தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் கிராம மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்த இவர்களின் விவசாய நிலங்களுக்கு நிலபத்திரங்கள் வழங்கப்பட்டன.