கோவை : சர்வதேச கழிப்பறை தினத்தையொட்டி, தமிழக நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடையே கழிப்பறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி உலக டாய்லெட் கழகம் என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் 'உலக கழிப்பறை தினம்' கடைபிடிக்கப்படுகிறது.

யுனிசெப் சர்வேயின்படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆண்டுதோறும், தூய்மை பற்றி ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர்.
கோவையில் சர்வதேச கழிப்பறை தினம் :
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை இணைந்து கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் மனித கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பெரியநாயக்கன் பாளையம் மனித கழிவு மேலாண்மையின் மூலம் வீடுகளில் இருக்கும் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதன் மூலம், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம், மனித கழிவு மேலாண்மையில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதாரணமாக பெரியநாயக்கன் பாளையம் திகழ்கிறது.
இதனிடையே, சர்வதேச கழிப்பறை தினம் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் மூலம் கோவையில் கொண்டாடப்பட்டது. அதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட இடங்களில், விழிப்புணர்வு வாகனத்தின் மூலம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கழிப்பறையின் பயன்பாடு மற்றும் யோசனைகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு, அன்றாட நடவடிக்கைகள் பற்றி ஆர்வத்துடன் பதிலளித்தனர்.

குறிப்பாக, சிவானந்தா காலனி, புதுப்பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட், ஹவுசிங் யூனிட் காலனி, ராக்கி பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம், மற்றும் பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட மேட்டுப்பாளையம் சாலைகளில் உள்ள பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை வேளையில், பூமார்க்கெட், டவுன்ஹால் மற்றும் சுங்கம் பை-பாஸ் போன்ற பகுதிகளில் இருந்த பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
உணவு விநியோகம் செய்யும் பணியைச் செய்து வரும் பல்வேறு இளைஞர்கள், பாதுகாவலர்கள், பூ விற்பனையாளர்கள், போலீசார் என பல்வேறு தரப்பினர் கோவை மாவட்டத்தில் குறைந்த அளவிலான கழிப்பறைகளே இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல, கட்டுத் தொழிலாளர்கள் மற்றும் பிற மாநில ஊழியர்கள், அவர்கள் பணிபுரியும் இடத்தில் கழிப்பறைகள் பயன்பாடற்று கிடப்பதால், திறந்த வெளியையே பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

முறையான கழிப்பறை வசதியில்லாததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, பயன்பாட்டில் இருக்கும் கழிப்பறைகள், முறையாகக் கட்டப்பட்ட செப்டிக் டேங்க், பாதுகாப்பாக வெளியேற்றுதல் போன்றவற்றை கட்டாயம் இருக்க வேண்டும். கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்படும் பட்சத்தில், மனிதக் கழிவு மேலாண்மை திட்டம் கோவை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்பது சந்தேகமில்லை.