கோவை : குடிசை மாற்று வாரியத்தின் பட்டியலில் இருந்து விடுபட்டுப் போன ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த 167 பேருக்கு வீடுகள் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று ஆத்துபாலம் பாலுசாமி நாயுடு வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ள வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும், 167 பேருக்கு மட்டும் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் பெற டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி வீடுகள் ஒதுக்கித் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.