நீலகிரி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நீலகிரி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயலால் தமிழகத்தில் திருவாருர், கடலூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் அ.தி.மு.க., சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்காக நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், அரிசி, பருப்பு, தண்ணீர், பிஸ்கட், 200 கிலோ தேயிலைதூள் உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜீணன் தலைமையில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.