விடுமுறை கொடுப்பதிலும் பாரபட்சம் : திருப்பூர் நடத்துநர் பணிமனை முன் அமர்ந்து உண்ணாவிரதம்

திருப்பூர் : போக்குவரத்து பணிமனையில் கடந்த சில மாதங்களாக விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் அதிகாரிகளைக் கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் பணிமனை முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் : போக்குவரத்து பணிமனையில் கடந்த சில மாதங்களாக விடுப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் அதிகாரிகளைக் கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் பணிமனை முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் குமார் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், தொடர்ந்து அவர் விடுமுறை கேட்கும் போதெல்லாம் போக்குவரத்து பணிமனை டி.சி மற்றும் பி.எம் ஆகியோர் விடுப்பு வழங்காமல் இருந்துள்ளனர். 



விடுமுறை நாட்களில் கூட ரமேஷை பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தனக்கு வேண்டியவர்களுக்கும், சாதகமானவர்களுக்கும் மட்டுமே அவர்கள் விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களிடம் பாரபட்சம் காட்டி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோரி நடத்துநர் ரமேஷ்குமார் திருப்பூர் 2-வது போக்குவரத்து பணிமனை முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...