திருப்பூர் : ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி திருமணம் செய்து கொண்ட வெள்ளகோவிலைச் சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு நேதாஜி வீதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் நந்தகுமார். கும்பகோணம் புளியம்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகள் சத்யபிரியா. இவர்கள் இருவரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு உதகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால், யாருடை தொடர்பு இல்லாத நிலையில், வெள்ளகோவில், உப்புபாளையம் சாலையில் உள்ள வி.ஐ.பி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
நத்தகுமார் மூலனூரில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம், நந்தகுமார் வேலைக்கு வராததால், அவரது கடையில் வேலை செய்பவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்து பார்க்கும்போது, நந்தகுமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக இது பற்றி வெள்ளகோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தரையில் சத்யபிரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இருவரின் வெள்ளகோவில் போலீசார் பிரேதங்களை காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.