முத்தண்ணன் குளம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தனிவீடுகள் கட்டித் தரவேண்டும் : எம்.எல்.ஏ. நா. கார்த்திக் வலியுறுத்தல்

கோவை : முத்தண்ணன் குளத்தின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, அருகிலேயே அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடுகள் கட்டித் தர வேண்டும் என தி.மு.க. எம்.எல்.ஏ. நா. கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.


கோவை : முத்தண்ணன் குளத்தின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, அருகிலேயே அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடுகள் கட்டித் தர வேண்டும் என தி.மு.க. எம்.எல்.ஏ. நா. கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்தவர்களின் வீடுகளை மாநகராட்சி அப்புறப்படுத்தி வருகிறது. முத்தண்ணன் குளம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வந்த நிலையில், வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தாமல் வீடுகளை அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

2006-ல் இருந்து 2011 வரை ஆட்சி செய்த தி.மு.க. காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார். முத்தண்ணன் குளம் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள வீடுகள் வெகு தொலைவில் இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது, வசித்து வரும் இடத்தின் அருகிலேயே அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடுகள் கட்டி தர வேண்டும். 

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாத காரணமாக விரிவாக்கப் பணிகள் நடைபெறாமல் உள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில், உரிய இழப்பீடு வழங்கி துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், எச்.ஐ.ஹெச்.எஸ். காலனி உயர்மட்ட மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அதனையும் தீர்க்க அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...