கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், கோவை மத்திய ரயில்நிலைய ஆட்டோ ஸ்டேண்ட் ஓட்டுநர்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்தனர்.

கஜா புயல் புரட்டிப் போட்ட டெல்டா மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள், கூட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், கோவை மத்திய ரயில்நிலைய ஸ்டேண்ட் ஆட்டோ ஓட்டுநர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகின்றனர். மேலும், ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் நிவாரணத் தொகை பெறப்பட்டது.