திருப்பூர் : திருப்பூரில் மருந்தக உரிமையாளரைத் தாக்கி ரூ. 9.50 லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இடுவாய் பகுதியில் வசிக்கும் கேசவன் (28) என்பவர் கணியாம்பூண்டியில் செல்லம் மெடிக்கல் என்ற பெயரில் மொத்த மருந்து வணிகம் மற்றும் மணி ட்ரான்ஸ்பர் செய்து வருகிறார். இவர் நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு ரூ 9.5 லட்சம் பணத்துடன், இடுவாய் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கேசவனை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் பாரதிபுரம் அருகே, கேசவனை வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அவர் கையிலிருந்த ரூ. 9.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டனர்.

இத்தாக்குதலில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த கேசவன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.