திருப்பூர் : குறைவான ஊதிய உயர்வுடன் போடப்பட்ட அரசாணைகளை எரித்து திருப்பூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், தங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குறைவான ஊதிய உயர்வுடன் போடப்பட்ட அரசாணை எண் 303 மற்றும் 234 ஆகியவற்றை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநில அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலிக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும் கூட, அரசாணை எரிக்கப்பட்டபோது அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருந்தனர். மேலும், அரசு ஊழியர்கள் என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.