குன்னூரில் கொத்து கொத்தாக காய்த்திருக்கும் ருத்ராட்சைகள் : கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரம் காய்த்துக் குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.


நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரம் காய்த்துக் குலுங்குவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் அதிக அளவில் உள்ளன. இயற்கையில் உள்ள அரிய வகை தாவரங்கள் அதிக அளவில் உள்ளதால், இந்த பூங்காவிற்கு தாவரவியல் படிக்கும் மாணவர்கள் வந்து ஆய்வு செய்து செல்வது வழக்கம்.



இமயமலை, நேபாளம் போன்ற மலைப்பிரதேசங்களில் அதிகளவில் காணப்படும் ருத்ராட்சமரங்கள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது சீசன் துவங்கியுள்ளதால் ருத்ராட்சை மரங்களில் அதிகளவில் காய்கள் காய்க்கத் துவங்கியுள்ளன. 

பஞ்சமுகம் கொண்ட ருத்ராட்ச மரங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குவதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். கீழே விழும் காய்களை சில சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த ருத்ராட்ச காய்களை சிலர் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். 

மேலும், சபரிமலைக்கு மாலையிட்டு செல்லும் பக்தர்கள் இங்கு வந்து இவற்றை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ருத்ராட்ச காய்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி வரை மரத்தில் இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...