கோவை : கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரத்சேனா அமைப்பினர் தனி சுடுகாடு முறையை ஒழிக்க வலியுறுத்தி பாடையுடன் மனு அளிக்க வந்தனர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாரத்சேனா அமைப்பினர் தனி சுடுகாடு முறையை ஒழிக்க வலியுறுத்தி பாடையுடன் மனு அளிக்க வந்தனர்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருந்த போதிலும், இன்றும் சாதிகளுக்கு ஏற்ப தனி சுடுகாடு இருந்து வருகிறது. அனைவரும் சமம் என்ற முறையில் இம்முறையை ஒழிக்க வேண்டும் என பாரத்சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவெடுத்தனர்.

இதையெடுத்து, பாடையுடன் வந்த பாரத்சேனா அமைப்பினர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தனி சுடுகாடு முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவின் மூலம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், "நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்துள்ளனர், பாரத்சேனா அமைப்பினர்.