கோவை : கோவையில் உள்ள வாகன நிறுத்தம் ஒன்றில் அதிக கட்டணம் வசூல் செய்தற்காக ஒப்ந்ததாரருக்கு மாநகராட்சி ஆணையர் ரூ.9000 அபராதம் விதித்துள்ளார்.

சிவானந்த காலனியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ஶ்ரீனிவாசபுரம் குறுக்கு வெட்டு சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தை நடத்தி வருகிறார். இதில் வாகனங்களை நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகக் கட்டணம் வசூல் செய்கிறார் என அவர் மீது தொடர்சியாக புகார் எழுந்தது. இதையெடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், இன்று யோகேஸ்வரனுக்கு ரூ9000 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் 24 மணி நேரத்திற்குள் அபராதத்தைக் கட்ட வேண்டும் எனவும் மேற்கொண்டு ஏதேனும் புகார் எழுந்தால் ஒப்பந்தம் எந்த விதிவிலக்குமின்றி ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.