கோவை : வீட்டின் பூட்டை உடைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கோவை மாநகர போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.

கோவையில் போத்தனூர், வெள்ளலூர் ,குனியமுத்தூர் மற்றும் கோவைபுதூர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்கும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்கும் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண் ஐ ஏ எஸ் உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர்.
மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் செய்த தீவிர சோதனைகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று சுகுணாபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த தேடுதல் வேட்டையில் வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்ற ரோபோ மணிகண்டன் என்பவரையும் அருண்குமார் (22) என்பவரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் மணிகண்டன் என்பவர் மீது தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் , 3 முறை குண்டர் சட்டத்தில் கைதான நபர் போன்ற தகவல்கள் கிடைத்தன.
மேலும், போலீஸ் நடத்திய விசாரணையில்அருண்குமார் மணிகண்டனுக்கு எல்லா குற்ற சம்பவங்களிலும் துணையாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து 2017 மற்றும் 2018 -ம் ஆண்டுகளில் கோவைப்புதூர் , வெள்ளலூர் மற்றும் போத்தனூரில் உள்ள எல்.ஐ.சி காலனி போன்ற பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் இவ்விசாரணையில் வெளிவந்துள்ளன.
அதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ,கோட்டூரிலும் மற்றும் திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் உள்ள வீடுகளில் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டடுள்ளனர். அவர்களிடமிருந்து போலீசார் 16 சவரன் தங்க நகைகள், இரண்டு கார்கள் ,ஒரு மோட்டார் பைக் மற்றும் இதர பொருட்கள் என மொத்தம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சில குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மாநகர காவல் ஆணையாளர், கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறை குழுவினரை பாராட்டியுள்ளார்.