கோவை : கோவையில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரில் போலியாக லேபிள் தயாரித்து பீடிகளில் ஒட்டி விற்பனை செய்து வந்த இளைஞரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஹைதர் அலி (30). பீடி விநியோகம் செய்வதை தொழிலாகக் கொண்டுள்ள இவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
அந்த புகாரின் சாரம் :- குனியமுத்தூர், கோவை புதூர் பகுதிகளில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள் தயாரித்து ஒட்டி பீடி விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் மோசடி செய்யும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து குனியமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் குப்புராஜ் மற்றும் போலீசார் விசாரணை ஈடுபட்டனர். அந்த விசாரணையில் கோவை புதூரை சேர்ந்த ஜியாவுல் ஹக் (29) என்பவர் பிரபல பீடி நிறுவனத்தின் லேபிள்களை போலியாகத் தயாரித்து ஒட்டி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலி லேபிள்களை கொண்டு பீடி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறை ஜியாவுலை கைது செய்து, அவரிடமிருந்த 480 பீடி பண்டல்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.