கோவை: 'மிகவும் எழுச்சியூட்டும் எழுத்தாளர் -2018' (Most inspiring author of 2018) என்ற விருதை கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே. விஜய கார்த்திகேயன் குர்கானில் நடைபெற்ற விழாவில் பெற்றுள்ளார்.

ஆண்டு தோறும் சிறந்த இளம் எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக, பல்வேறு எழுத்தாளர்களால் குர்கானில் விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், கோவை மாநகராட்சி ஆணையருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

விஜயகார்த்திகேயன் அவர்கள் எழுதி, சமீபத்தில் வெளியான, 'Once upon an IAS exam' என்ற புத்தகம் இணையதளத்தில் அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதோடு, புத்தகம் வெளியான சில நாட்களிலேயே 10,000 பிரதிகள் விற்பனையானது.
குடிமைப் பணி தேர்வுக்காக தயாரிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கூறும் இந்த புத்தகம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது, புத்தகத்தின் எழுத்தாளர் விஜய கார்த்திகேயனுக்கு 'Most inspiring author of 2018' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்