நீலகிரி : மசினகுடி பகுதியில் உள்ள ஆதிவாசி இன மக்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் போலீசார் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவின் உத்தரவுபடி, காவல்துறை, மாவட்ட தோடர் முன்னேற்றம் சங்கம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமை காவல்துறை சார்பில் கூடலூர் டி.எஸ்.பி. ஜெய்சிங் தொடங்கி வைத்தார்.

முகாமில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் இருந்து தலைசிறந்த 26 மருத்துவ நிபுணர்கள் பங்குபெற்று, ஆதிவாசி இன மக்கள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள். இந்த முகாமில் பொது மக்கள் சுமார் 175 பேர் கலந்து கொண்டனர்.