இந்து முன்னணியின் 1,008 கோமாதா விளக்கு பூஜைக்கான விழிப்புணர்வு ரத யாத்திரை

கோவை : இந்து முன்னணி நடத்தும் 1,008 கோமாதா பூஜைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரத யாத்திரை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை : இந்து முன்னணி நடத்தும் 1,008 கோமாதா பூஜைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரத யாத்திரை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

தமிழக இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் விதமாக, திருப்பூரில் அடுத்த மாதம் மூன்று நாட்களுக்கு 1,008 பசுக்களை வைத்து கோமாதா பூஜை மற்றும் குதிரைகளை வைத்து அஸ்வ பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனை மக்களிடம் விளக்கும் விதமாக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ரதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் யாக வேள்விக்கான கூடம் அமைக்கப்பட உள்ள நிலையில், அவற்றுக்கான செங்கல் மற்றும் நெய் ஆகியவற்றை பொதுமக்களிடம் பெறுவதற்காக இந்த ரத யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.



கடந்த வாரம் கோவையில் அந்த அமைப்பின் தலைவர் ராம.கோபாலனால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ரத யாத்திரை, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சென்றடைந்தது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்த ரத யாத்திரைக்கு கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, அகத்தியர் தியான பீடபூமி சார்பில் குருக்கள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ரதயாத்திரையானது, மேட்டுப்பாளையம் முழுவதும் சுற்றிவரப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



சுமார் 500 மடாதிபதிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களைக் கொண்டு நடத்தத் திட்டமிட்டுள்ள இந்த பூஜையில், அனைத்து இந்துக்களும் கலந்துகொள்ள இந்து முன்னணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...