திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற கூலி தொழிலாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மரணமடைந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரதிற்கு அருகில் கோவிந்தாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகுடீஸ்வரன். இவர் நெஞ்சு வலி காரணமாக பொன்னாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சிகிச்சை பலனில்லாமல் மகுடீஸ்வரன் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்கள் 100- க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :- "ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெஞ்சுவலி சிகிச்சைக்காக சென்றவரை எந்தவித பரிசோதனையும் செய்யாமல் மேலோட்டமாக சிகிச்சைக் கொடுத்துள்ளனர். சரியான பரிசோதனையில்லாமல் தவறான மருந்தை ஊசி மூலமும் செலுத்தியதால் தான் வீடு திரும்பியதும் உயிரிழந்துவிட்டார்" என்கிறார்கள், உறவினர்கள்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை சமரசம் செய்தும் கலைந்து செல்லாததால் சிறிது நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் நீண்ட தூரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.