3 நாட்களாக அடர்ந்த புதருக்குள் சிக்கி கொண்டவரை உயிருடன் மீட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை அருகே அடர்ந்த புதருக்குள் மாட்டிகொண்டு 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவரை சிங்காநல்லூர் போலீசாரும் ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து , மீட்டு கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை அருகே அடர்ந்த புதருக்குள்  மாட்டிகொண்டு 3 நாட்களாக உயிருக்கு போராடி வந்தவரை சிங்காநல்லூர் போலீசாரும் ஆத்மா அறக்கட்டளையும் இணைந்து , மீட்டு கோவை அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



காமாட்சிபுரம் சூரியா நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியம்(40), இவர் காமாட்சிபுரம் போலிஸ் செக்போஸ்ட் எதிரே இருக்கும் வாய்க்காலில் உள்ள முட்புதர் அருகே மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். மேலும் இவர் மயக்கத்திலேயே கடந்த 3 நாட்களாக உணவு மற்றும் நீர் இன்றி தவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் அந்த முட்புதர் அருகே காலைகடன் கழிக்க சென்றவர் புதருக்குள் மாட்டி கிடந்தவரை மீட்க முயற்சி செய்து பின்னர் முடியாமல் சிங்காநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜேஷ்,பாலமுருகன் மற்றும் சுகுமார் ஆகியோரும் ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் அடர்ந்த முட்புதருக்குள் மாட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியத்தை மீட்டனர். பின்னர் அவருக்கு நீர் மற்றும் உணவு கொடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கடந்த 3 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்த சுப்பிரமணியத்தை காவல்துறை அதிகாரிகள் ராஜேஷ், பாலமுருகன் மற்றும் சுகுமார் ஆகியோரும், ஆத்மா அறக்கட்டளை சேர்ந்தவர்களும் மீட்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...