கோவை: திமுக சார்பில் நடைபெறவிருந்த கலைஞர் புகழஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததற்கு தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இன்று பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் திமுக சார்பில் கலைஞர் புகழஞ்சலி கூட்டம் நடத்தக் காவல் துறையினரிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. காவல் துறையினர் இதற்கு வாய் மொழியாக அனுமதி அளித்ததால் திமுகவினர் கூட்டத்திற்கான மேடை அமைத்து, சுவரொட்டி ஒட்டி தயாராகி கொண்டிருந்தார்கள். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கலைஞரின் புகழஞ்சலி நிகழ்ச்சிக்குக் காவல் துறையினர் திடீரென அனுமதி மறுத்ததோடு, கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி உரையாற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும் கூறியுள்ளனர்.
இது குறித்து ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:- "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது நான் திமுக சார்பில் ஊழல் வழக்கு போட்டிருப்பதால் காவல் துறை இந்தக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. நான் எங்கு சென்றாலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தூண்டுதலினால் காவல் துறைத் தொடர்ந்து எனக்கு அனுமதி மறுத்து வருகிறது.
சென்னையிலும் இதேப் போன்று அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. கலைஞரின் புகழஞ்லி நடத்த ஒரு வாரக் காலத்திற்குள் காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அடிப்படை வசதிகளைக் கூட இந்த அரசு செய்து கொடுக்கவில்லை. திமுக சார்பில் இதுவரை 10 கோடி மதிப்பினாலான நிவாரண பொருட்களை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணம் போதுமானதல்ல என்று வெளிப்படையாகவே தெரிகிறது.
இதனால், டெல்டா மாவட்டத்தை ஒழிக்க மத்திய அரசு முயல்கின்றதோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைத் தட்டிக்கேட்கின்ற அரசாக மாநில அரசு இல்லாமல் கோழைத்தனமான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில், தருமபுரியில் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 3 பேர் விடுதலையில் ஆர்வம் காட்டியதை போல ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில் ஏன் மாநில அரசு அக்கறை காட்டவில்லை." என்று கேள்விகளை எழுப்பினார், ஆர்.எஸ்பாரதி.