பல்லடத்தில் பெண் சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி விபத்து

திருப்பூர்: பல்லடம் வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்துடன் கோவை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் காவலர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருப்பூர்: பல்லடம் வாய்க்காலில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் சடலத்துடன் கோவை நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் காவலர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளனர்.



பல்லடம் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பனப்பாளையத்தில் வெள்ளக்கோவிலில் இருந்த வாய்க்காலில் பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. அதனைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்ஸ் மீது கோவையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மற்றும் ஏட்டு சுதாகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, காயமடைந்த இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



மேலும், இறந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். 

அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சேகர் மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...