கோவை : கோவை மாநகர காவல்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உறுதுணையாக இருந்த 'ராஜா' என்ற ஆண் நாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உறுதுணையாக இருந்த 'ராஜா' என்ற ஆண் நாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மோப்பநாய் பிரிவில் டாபர்மேன் வகையைச் சேர்ந்த ராஜா (9) என்ற நாய் இருந்தது. இந்த நாய்க்கு 2010-ம் ஆண்டில் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் கொலை, கொள்ளைகளைக் கண்டுபிடிக்க சுமார் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 118 வழக்குகளை விசாரிக்க உதவியாக இருந்துள்ளது. அதேபோல, இந்த நாய் கொலை, கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உதவியாக இருந்துள்ளது. இது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது.

இந்த நிலையில், மோப்ப நாய் ராஜா, வயது முதிர்வின் காரணமாக இன்று உயிரிழந்தது. இதையடுத்து, போலீசார் நாயை கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்திலேயே நல்லடக்கம் செய்தனர். இந்த நாயின் இறப்பு கோவை மாநகர காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.