நீலகிரி : கடந்த 2017-ம் ஆண்டு கூடலூர் அருகே சுருக்கு கம்பி இறுகியதில் பெண் புலி உயிரிழந்த வழக்கில் ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரககத்திற்குட்பட்ட இம்பரல்லா குளக்கரையில் கடந்த 19.11.2017-ல் கழுத்தில் சுருக்கு கம்பி இறுகிய நிலையில் சுமார் ஒன்றரை வயதுள்ள பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து எரித்த வனத்துறையினர் இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்கொல்லி கிராமத்தைச் சேர்ந்த பாலன் (57) என்பவரை தெப்பக்காடு வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். புலிகள் காப்பக கள இயக்குநர் உத்தரவுப்படி இவர் மீது வழக்குப் பதிவு செய்து கூடலூர் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இறந்த புலியின் வாழ்விடம் கேம்ஹட் ஜங்சன், காப்பூர் மற்றும் பனங்கொல்லி பகுதிகளாகும். இப்பகுதியில் விவசாயத்தைப் பாதுகாக்க வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி இறந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்துள்ளோம்," என்றனர்.