கோத்தகிரியில் கஞ்சா விற்பனைக்குக் கொண்டு வந்த 2 வாலிபர்கள் கைது

நீலகிரி : மேட்டுப்பாளையம் புளியம்பட்டியிலிருந்து விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்த இரண்டு வாலிபர்களை கோத்தகிரியில் போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : மேட்டுப்பாளையம் புளியம்பட்டியிலிருந்து விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்த இரண்டு வாலிபர்களை கோத்தகிரியில் போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கு சமவெளி பகுதிகளிலிருந்து வரும் சமூக விரோதிகள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால், இதனை வாங்கிப் பயன்படுத்தும் இளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வந்தது. இதனை தடுக்கும் விதமாக, கோத்தகிரி போலீசார் குஞ்சப்பணை சோதனைசாவடி மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் விற்பனையைத் தடுக்க தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர். மேலும், கஞ்சா விற்பவர்களைக் கைது செய்ய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து கஞ்சாவை கோத்தகிரிக்கு பகுதிக்கு விற்பனைக்குக் கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் இருக்கும் குஞ்சப்பணை சோதனை சாவடியில் மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். 



அப்போது, பார்சல் ஒன்றுக்குள் சிறு, சிறு பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவர்கள் உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (34), அதே பகுதியை சேர்ந்த காட்வின் (26) என்பதும் தெரிய வந்தது. இதனைத்தொடந்து, இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து யார் கஞ்சா சப்ளை செய்கிறார்கள் என்பது குறித்து தீவிர ‌விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...