கோவை அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை ஒளிப்பதிவு செய்யக் கூடாது : மருத்துவமனையின் நிர்வாகியின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனைக்குள் மீடியாக்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர். கணேஷ் பாபு கூறியிருப்பது, மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை மறைக்கும் விதமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை : கோவை அரசு மருத்துவமனைக்குள் மீடியாக்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது என மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர். கணேஷ் பாபு கூறியிருப்பது, மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை மறைக்கும் விதமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகள் பலர் மருத்துவர்களின் வாய்மொழி உத்தரவால் வெளியே தூக்கி வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதில் காலதாமதம், மருத்துவ பணியாளர்கள் லஞ்சம் வாங்குவது, சுகாதார சீர்கேடு, அலட்சியங்கள் என பல புகார்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல, மருத்துவமனைக்குள் நோயாளியாக இருந்து இறந்த உடல்கள் மருத்துவமனைக்குள் இருந்து பிரேத கிடங்கிற்கு (மார்ச்சரி) செல்வதற்கே கிட்டத்தட்ட 3 முதல் 4 மணிநேரம் வரை ஆகிறது. 

பின்னர், பிரேத கிடங்கில் இருந்து இலவச ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்புவதற்குள் 6 மணி நேரம் வரை ஆகிறது. இந்த சம்பவங்கள் மாலை நேரங்களில் நடைபெறும்பொழுது இறந்த உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்கள் நிலவுவதாக நோயாளிகளின் உறவினர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இறந்த வயது முதிர்ந்த பெண்ணின் உடலை பூனை கடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இதைத்தொடர்ந்து, ஊடகத்தினர் இரவென்றும் பாராமல் உடனடியாக சென்று அந்த அவல நிலையைப் பதிவு செய்தனர். இது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இதுபோன்ற அவலங்களை ஊடகங்கள் மூலம் செய்தியாக வெளியிடுவதால் அரசு மருத்துவமனையில் நடைபெறும் அலட்சியங்கள் சற்று குறைந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பொதுமக்களின் குறைகளை ஊடகத்தினர் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கும் விதமாக, மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவரான டாக்டர். கணேஷ்பாபு மருத்துவமனை வளாகத்திற்குள் ஊடகத்தினர் செய்தி ஒளிப்பதிவு செய்யக் கூடாது என வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக ஊடகத்தினர் டாக்டர். கணேஷ்பாபுவிடம் கேட்டபோது, அவர் சரியான பதிலை சொல்லாமல் அதிகார தொனியில் பேசியுள்ளார். இதனால், ஊடகத்தினர் சுகாதாரத்துறை செயலாளரிடம் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக தெரிவித்ததையடுத்து ஊடகவியலாளர்கள் கலைந்து சென்றனர்.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையின் அவலங்களை ஊடகத்தினர் செய்திகளாக வெளியிடுவதை தடுப்பதற்கு பதிலாக, இம்மருத்துவமனைக்குள் பொதுமக்களுக்கு நடக்கும் அவலங்களையும், அலட்சியங்களையும் தடுத்தாலே ஊடகங்கள் அரசு மருத்துவமனைக்குள் வருவதைத் தானாக நிறுத்தி கொள்வது அதிகாரிகளுக்கு தெரியவில்லை போலும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...