நீலகிரி : கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்திற்கு கூடலூர், பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட வணிகர் சங்கங்கள் சார்பில் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று அனுப்பி வைத்தார்.

கடந்த வாரம் கஜா புயலால் தமிழகத்தில் திருவாருர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இதனால், பல பேர் தங்களது வீடுகளை இழந்து பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலூகாவைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்காக நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகள் அரிசி, பருப்பு, தண்ணீர், பிஸ்கட், கிராம்பு, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட ரூ. 8 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று அனுப்பி வைத்தார்.