திருப்பூர் : திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊத்துக்குளி சாலையில் உள்ள விவேகானந்த பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருப்பினும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தார். இதனால், காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனையடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்பே, இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல, கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும், என்று கூறினார்.