கோவை : கோவை மாநகராட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் மேல்நிலை ஆசிரியர்கள் 13 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 83 பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் குறித்த கவுன்சலிங் நடத்தப்படும். அதன்படி, விருப்பமான ஆசிரியர்களிடம் பணியிடமாற்றம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப்பிரிவுக்கான முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ சில தினங்களுக்கு முன்னர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் 9 பேர் சீனியாரிட்டி அடிப்படையில் மேல்நிலைப்பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்களில் தமிழுக்கு 3 பேர், பொருளாதாரத்திற்கு 2 பேர், கணிதத்திற்கு 3 பேர், வரலாறு பிரிவுக்கு ஒருவர் என அந்தந்தப் பாடங்களுக்கு ஏற்ப நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மேல்நிலைப்பிரிவில் 4 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் வேதியியல், தமிழ், பொருளாதாரம், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் கவுன்சலிங் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 13 ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமும், 14 ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் மூலமும் நியமிக்கப்பட உள்ளனர்”, என்றார்.