கோவையில் ரூ. 204 கோடி செலவில் 5 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல்

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 204 கோடி செலவில் மாதிரி சாலைகள் உள்ளிட்ட 5 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

கோவை : கோவை மாநகராட்சியில் ரூ. 204 கோடி செலவில் மாதிரி சாலைகள் உள்ளிட்ட 5 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் உள்பட 8 குளங்கள் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ், குளங்கள் பராமரிப்பு, குளத்தின் அருகே இருக்கும் பொதுஇடங்களை மேம்படுத்துதல், பூங்கா மற்றும் நடைபாதை போன்றவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி குளங்களை மறுசீரமைக்கும் வகையில், கரைகளைப் பலப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் உபரிநீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ரூ. 152 கோடி செலவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 

மேலும், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 37 கோடி செலவில் பந்தயச்சாலை சாலைகளையும், ரூ. 15 கோடி செலவில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.வி. சாமி சாலையை மாதிரி சாலைகளாக மாற்ற அரசு அனுமதியளித்துள்ளது. 



கோவை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கோவை மாநகராட்சியில் ரூ. 204 கோடி செலவில் மாதிரி சாலைகள், குளங்கள் மறுசீரமைப்பு உள்ளிட்ட 5 ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கான பணி ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இது குறித்து கோவை மாநகராட்சி மூத்த அதிகாரிகள் கூறுகையில், "தயார்நிலையில் உள்ள 5 திட்டங்கள் தொழில்நுட்பக் கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த மாதத்தில் டெண்டர் தேதி அறிவிக்கப்படும்," என்றனர். 

இதேபோல, ரூ. 152 கோடி செலவிலான புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும்பட்சத்தில், வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தாமணி ஆகிய 3 குளங்கள் புதுப்பொழிவு பெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...