கோவை : சிறுபான்மையினர் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆதரவற்றோருக்கு உதவும் வகையிலான மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 05-ம் தேதி கடைசி நாளாகும்.

கோவை மாவட்டத்தில் சிறுபான்மையினர் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்களுக்கு உதவிடும் வகையில், அவர்கள் சுயமாக தொழில் செய்திட வழிவகை செய்திட, கோவை மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கத்தில் கவுரவச் செயலர், கவுரவ இணைச் செயலாளர், உறுப்பினர் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
மாவட்ட கிறிஸ்துவ மகளிர் சங்கத்திற்கு நல்ல திறன்மிக்க சமூக தொண்டாற்றுவதில் ஆர்வமுள்ள கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் சுய குறிப்புடன் வரும் டிச.,05-ம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.