பீளமேட்டில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

கோவை : பீளமேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை : பீளமேடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி சரோஜினி (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சரோஜினியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையைப் பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்துள்ளனர்.

இதுகுறித்து, சரோஜினி பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சரோஜினியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

மேலும், அந்த சி.சி.டி.வி. காட்சியில் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணியாமலும் இருந்தார். இதனால், ஒருவரின் முகம் எளிதில் அடையாளம் காண முடிந்தது. அத்துடன் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணும் கண்டறியப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சங்கிலியை திருடிய இருவரும் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த லாரன்ஸ் (30) மற்றும் ஜெகதீஸ்வரன் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் லாரன்சும், ஜெகதீஸ்வரணும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சரோஜினியின் 6 பவுன் சங்கிலி மீட்கப்பட்டது.

மேலும், காவல்துறை நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கூட்டாக ஏற்கனவே, சேலத்தில் பல்வேறு பெண்களிடம் நகை பறித்ததும், காவல்துறையில் பிடிபடாமல் இருக்க அங்கிருந்து கோவை தப்பி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...