கோவை : மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், தமிழக – கேரள எல்லையோர வனப்பகுதியில் இருமாநில போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதி மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள கேரள வனப்பகுதியான அட்டப்பாடி காட்டை ஒட்டியுள்ளதாகும். இதனால், அடர்ந்த வனப்பகுதி வழியே தமிழகத்தினுள் மாவோயிஸ்ட்டுக்களின் ஊடுருவலை தடுக்க இருமாநில எல்லையோரங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படையினர் எல்லையோர காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியான நிலம்பூர் என்னும் காட்டில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுக்களை சுற்றி வளைத்த கேரள அதிரடிப்படை போலீசார் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்பும் மோதிக்கொண்ட இத்துப்பாக்கி சண்டையில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக கருதப்படும் பெண் மாவோயிஸ்ட் அனிதா மற்றும் குப்புராஜ் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இவர்களுடன் இருந்த மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி சென்றனர்.
இச்சம்பவத்தை அடுத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுக்களின் மரணத்திற்கு உரிய பதிலடி தரப்படும் என அந்த இயக்கத்தின் சார்பில் இரு மாநில எல்லையோர மலைக்கிராமங்களில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில், நாளை இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் என்பதால் மாவோயிஸ்ட்டுக்கள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற தகவலின் பேரில், தமிழக - கேரள எல்லையோரப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கேரள வனத்தில் இருந்து கோவைக்குள் நுழையும் அனைத்து மலைச்சாலைகளிளும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கேரள காடுகளை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படையினர் புகுந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.