முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை : முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய நபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை : முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய நபருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கும், அதே தெருவைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவருக்கும் நிலப் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதியன்று மணிகண்டன், பிருத்திவிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மணி, அமுதன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வசைச் சொற்களால் வாக்குவாதம் முற்றியதையடுத்து, மூவரும் சேர்ந்து மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்போது, பிரித்திவிராஜ் சம்பவ இடத்திலிருந்த கல்லை எடுத்து மணிகண்டனை மேலும் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் எண் - 3-ல் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்த போது, பிருத்திவிராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையெடுத்து, பிரித்திவிராஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் வேலுச்சாமி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...