கோவை : ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, 'ஜி.ஆர்.ஜி ஹெல்ப்' என்ற புதிய செயலியை ஏ.டி.ஜி.பி. சைலேந்தர் பாபு கோவை ரயில் நிலையத்தில் இன்று அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "திருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை குறித்த புகார்கள், கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்த தகவல், சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் பொருட்கள் குறித்த தகவல் என ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் நடக்கும் அனைத்து சம்வங்களுக்கும் இந்த செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், தகவல் தெரிவிக்கப்பட்ட இரண்டு நிமிடங்களில் ரயில்வே காவல்துறையினர் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். குற்றம் நிகழ்ந்த சில நிமிடங்களில் குற்றவாளியை கண்டுபிடிப்பதும், குற்றங்கள் நிகழாமல் தடுப்பதுமே இந்த செயலியின் நோக்கம். ஜி.ஆர்.பி ஹெல்ப் செயலியின் தலைமையிடம் போபாலில் அமைந்துள்ளதால், வடமாநிலங்களிலும் பயன்படும் விதமாகவே இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்கள் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கத் தயங்குவதுண்டு. ஆனால், இனிமேல் ஜி.ஆர்.பி. ஹெல்ப் ஆப் மூலம் புகார் பதிவு செய்தாலே போதுமானது. புகாரினை பரிசீலனை செய்யும் பெண் காவலர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்," என்றார்.
இந்த புதிய செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதில் ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளின் எண்களும் இணைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.